Aug 28

மீண்டும் திறக்கப்பட்டது மின்னேரியா தேசிய பூங்கா...!


வனஜீவராசிகள் உத்தியோகத்தர்களின் எதிர்ப்பு நடவடிக்கை காரணமாக தற்காலிகமாக மூடப்பட்டிருந்த மின்னேரிய மற்றும் கவுடுல்ல தேசிய பூங்கா மீண்டும் திறக்கப்பட்டுள்ளது.மின்னேரியா வனப்பகுதிக்குள் அமைந்துள்ள ஆற்றில் தடை செய்யப்பட்ட மீன் பிடி வலைகளை பயன்படுத்தி மீன்பிடி நடவடிக்கைகளில் ஈடுபட்டார்கள் என தெரிவித்து மீனவர் ஒருவரை கைது செய்தமைக்காக வன ஜீவராசிகள் உத்தியோத்தர்கள் மீது தாக்குதல் மேற்கொள்ளப்பட்டது.இதனையடுத்தே குறித்த தேசிய பூங்கா தற்காலிகமாக மூடப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.