Aug 28

டொன் பிரட்மனின்- 110 ஆவது பிறந்ததினம்!!


கிரிக்­கெட்­டின் கட­வுள், கிரிக்­கெட்­டின் ஜாம்­ப­வான் என்று புக­ழப்­ப­டும் டொன் பிரட்­ம­னின் 110ஆவது பிறந்த தினம் நேற்­றுக் கொண்­டா­டப்­பட்­டது. இதற்­காக பிர­பல தேடல் பொறி­யான கூகிள் சிறப்பு வடி­வத்­தில் தனது முகப்பை மாற்­றி­யது.

ஆஸ்­தி­ரே­லி­யா­வைச் சேர்ந்­த­வர் டொன் பிரட்­மன், பல­ரும் கன­வி­லும் நினைத்­துப்­பார்க்க முடி­யாத பல்­வேறு சாத­னை­களை இன்­று­வரை தன்­னி­டம் வைத்­துள்ள கிரிக்­கெட் ஜாம்­ப­வான். ஏனைய வீரர்­க­ளின் பெறு­பே­று­க­ளுக்­கும் பிரட்­ம­னின் பெறு­பே­று­க­ளுக்­கும் இடை­யில் மிகப்­பெ­ரும் வேறு­பாடு உள்­ளது.
அதற்கு உதா­ர­ண­மாக 1930ஆம் ஆண்­டில் ஆஸ்­தி­ரே­லியா – இங்­கி­லாந்து அணி­க­ளுக்கு இடை­யில் நடை­பெற்ற டெஸ்ட் ஆட்­டத்­தைச் சொல்­ல­லாம். இந்த ஆட்­டத்­தின் முதல் நாளி­லேயே முச்­ச­தத்­தைப் பதி­வு­செய்­தி­ருந்­தார் பிரட்­மன். உணவு இடை­வே­ளை­யின்­போது சதம், தேனீர் இடை­வே­ளை­யின் போது இரட்­டைச் சதம், நாள் முடி­யும்­போது ஆட்­ட­மி­ழக்­கா­மல் 309 ஓட்­டங்­கள் என்று பிரம்­மிக்க வைத்­தார் பிரட்­மன்.
ஒரே நாளில் 300 ஓட்­டங்­கள் என்­பது இன்­னும் யாரா­லும் தாண்ட முடி­யாத சாத­னை­யா­கவே உள்­ளது. அவர் விளை­யா­டிய 20 ஆண்­டு­க­ளில் வெறும் 50 டெஸ்ட் ஆட்­டங்­களே ஆஸ்­தி­ரே­லி­யா­வால் விளை­யா­டப்­பட்­டன.


அவற்­றுள் இங்­கி­லாந்து அணி­யு­டன் மட்­டும் 37 ஆட்­டங்­க­ளில் விளை­யா­டிய அவர் மொத்­தம் 6 ஆயி­ரத்து 996 ஓட்­டங்­க­ளைக் குவித்­துள்­ளார். துடுப்­பாட்­டச் சரா­சரி பிர­மிக்­க­வைக்­கும் வகை­யில் 99.96ஆக உள்­ளது.