Aug 28

எல்ஜி ஆன்ட்ராய்டு ஒன் ஸ்மார்ட்போன் அறிமுகம்

எல்ஜி நிறுவனம் ஜி7 ஒன், ஆன்ட்ராய்டு ஒன் ஸ்மார்ட்போன், ஜி7 ஃபிட் ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்துள்ளது. எல்ஜி ஜி7 ஒன் ஸ்மார்ட்போனில் ஸ்டாக் ஆன்ட்ராய்டு வழங்கப்பட்டுள்ளது.

இரண்டு புதிய எல்ஜி ஸ்மார்ட்போன்களிலும் 6.1 இனஅச் QHD பிளஸ் 19:5:9 ஃபுல் விஷன் எல்.சி.டி. சூப்பர் பிரைட் டிஸ்ப்ளே, IP68 தரச் சான்று பெற்ற வாட்டர் மற்றும் டஸ்ட் ரெசிஸ்டண்ட், MIL-STD 810G ரானுவ உறுதித்தன்மை, ஹைஃபை குவாட் டி.ஏ.சி., 8 எம்பி செல்ஃபி கேமரா, 3000 எம்.ஏ.ஹெச். பேட்டரி, க்விக் சார்ஜ் 3.0 வழங்கப்பட்டுள்ளது.

எல்ஜி ஜி7 ஒன் ஸ்மார்ட்போன் குவால்காம் ஸ்ன்ப்டிராகான் 835 சிப்செட், ஜி7 ஃபிட் மாடலில் ஸ்னாப்டிராகன் 821 சிப்செட், 4 ஜிபி ரேம் வழஹ்கப்பட்டுள்ளது.

ஜி7 ஒன் மாடலில் பிரத்யேக கூகுள் அசிஸ்டண்ட் பட்டன், 16 எம்பி பிரைமரி கேமரா F/1.6 அப்ரேச்சர், ஜி7 ஃபிட் மாடலில் 16 எம்பி பிரைமரி கேமரா, F/2.2 அப்ரேச்சர் கொண்டுள்ளது.எல்ஜி ஜி7 ஒன் புதிய அரோரா பிளாக் மற்றும் புதிய மொராக்கன் புளு நிறங்களில் கிடைக்கிறது, எல்ஜி ஜி7 ஃபிட் புதிய பிளாட்டினம் கிரே மற்றும் புதிய அரோரா பிளாக் நிறங்களில் கிடைக்கிறது.

இரண்டு புதிய எல்ஜி மாடல்களும் இந்த வாரம் துவங்க இருக்கும் ஐ.எஃப்.ஏ. விழாவில் வெளியிடப்படுகிறது. இவற்றின் விலை மற்றும் விற்பனை விவரங்கள் விரைவில் வெளியிடப்படலாம்.