Aug 28

ஒரு கோடிக்கு 503 கிராம் சுற்றிவளைத்த பொலிஸார் திகைப்பில்!


புதுக்கடை பகுதியில் ஒரு கோடி ரூபாவிற்கும் அதிகமாக அய்ஸ் என்ற போதைப்பொருளுடன் நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

சந்தேக நபர் முச்சக்கர வண்டி ஒன்றில் 503 கிராம் போதைப்பொருளை வெல்லம்பிட்டியவிற்கு எடுத்து செல்லும் போதே கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

வெள்ளவத்தை குற்றவியல் தடுப்பு பிரிவினருக்கு கிடைத்த தகவலையடுத்து பொலிஸார் மேற்கொண்ட சோதனைகளின் போதே குறித்த நபர் இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

சந்தேக நபர் சில மாதங்களுக்கு முன்னர் கொலை செய்யப்பட்ட ரிஸ்வான் என்பவரின் உதவியாளர் எனவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.