Aug 28

சூறாவளி வந்தால் என்ன? அஞ்சாமல் அலையாட விரும்பும் வினோத மக்கள் - வீடியோ இணைப்பு"

இயற்கையின் சீற்றத்தைத் தாங்க முடியாமல் வீட்டிற்குள் பாதுகாப்பாக இருக்கவே விரும்புவர் பலர்.சூறாவளியின்போது இயற்கையின் சீற்றத்தைத் தாங்க முடியாமல் வீட்டிற்குள் பாதுகாப்பாக இருக்கவே விரும்புவர் பலர்.ஆனால் சிலர் சூராவளியின்போது வீட்டிலிருந்து கடற்கரையை நோக்கி தைரியமாக ஓடுகின்றனர்.

எதற்காக?ஹாவியியின் பிக் ஐலண்ட் (Big Island) தீவை நேற்று லேன் (Lane) சூறாவளி தாக்கியது.பலத்த மழை, காற்று... உயரே எழுந்து வீழும் அலைகள்ஹவாயி தீவின் கடற்கரைகள் மூடப்பட்டன.

இவற்றை எல்லாம் மீறி சூறாவளியுடன் சேர்ந்து பெரிய அலைகளின் மேல் அலையாட சிலருக்குக் கொள்ளை ஆசை.அனுபவம் வாய்ந்த அலையாடல் வீரர்கள் துணிச்சலுடன் விளையாடி மகிழ்ந்தனர்.இம்முறை வந்த பெரிய அலைகளைப் போல் இதுவரை பார்த்ததில்லை என்று கூறிய அவர்கள் இந்த வாய்ப்பை நழுவவிடக்கூடாது என புகுந்து விளையாடினர்.