Aug 28

புதிய அத்தியாயம் தொடக்கம்.. திமுக தலைவர் ஸ்டாலினுக்கு, ராகுல் காந்தி வாழ்த்து

திமுக தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள மு.க.ஸ்டாலினுக்கு, காங்கிரஸ் கட்சி தலைவர் ராகுல் காந்தி ட்விட்டரில் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

திமுக தலைவராக இருந்த கருணாநிதியின் மறைவையடுத்து, திமுக செயல் தலைவராக இருந்த ஸ்டாலின் இன்று அக்கட்சியின் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

ஸ்டாலின் தலைவராகவும், துரைமுருகன் பொருளாளராகவும் ஒருமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டதாக கட்சி பொதுச் செயலாளர் அன்பழகன் அறிவித்தார்.

இதுகுறித்து, ராகுல் காந்தி தனது ட்விட்டர் பக்கத்தில் கூறியுள்ளதாவது:

திமுக தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்ட மு.க. ஸ்டாலினுக்கு எனது வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.அரசியல் பயணத்தில் புதிய அத்தியாயத்தை தொடங்கி உள்ள ஸ்டாலின் அதில் வெற்றி பெற நான் வாழ்த்துகிறேன்.

இவ்வாறு ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். முன்னதாக மேற்கு வங்க முதல்வர் மமதா பானர்ஜியும், ஸ்டாலினுக்கு தனது வாழ்த்துக்களை தெரிவித்திருந்தார்.