Aug 28

அதிமுகவில் மீண்டும் சலசலப்பு ; எடப்பாடிக்கு எதிராக ஓபிஎஸ் - மதுசூதன் சீற்றம்.!

கடந்த 2016 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் அதிமுக தலைவி ஜெயலலிதா மறைந்தது தொடங்கி அக்கட்சியில் எண்ணற்ற சலசலப்புகள் நிகழ்ந்து வருகின்றன. இன்னமும் அவை ஓர் முடிவுக்கு வந்தபாடில்லை. ஓபிஎஸ் முதல்வர் பதவியிலிருந்து சசிகலா கும்பலால் நீக்கப்பட்டது. பின்பு சசிகலா கும்பலை எடப்பாடி விரட்டியது என நீளும் இந்த பட்டியலில் தற்போது மதுசூதனன் - எடப்பாடி மோதல் இடம் பெற்றுள்ளது.


கட்சியில் போதிய அளவுக்கான முக்கியத்துவம் அளிக்கப்படவில்லை எனவும், தமது தரப்பினை சேர்ந்தவர்கள் புறக்கணிக்கப்படுவதாகவும் எடப்பாடியிடம் இன்று காலை நடந்த சந்திப்பின் போது தெரிவித்துள்ளார் மதுசூதனன்.

அதிமுகவின் அவைத்தலைவராக உள்ள மதுசூதனன் மற்றும் செம்மலை உள்ளிட்டோரின் பெயரை குறிப்பிட்டு அவர்கள் சார்ந்துள்ள அணிக்கே இரட்டை இலை சின்னம் வழங்கப்படுவதாக இரு அணிகள் இணைந்த பின்னர் தேர்தல் ஆணையம் தெரிவித்திருந்தவை குறிப்பிடத்தக்கது.

அந்த வகையில் பலமுள்ளவராக கருதப்படும் மதுசூதனன், எடப்பாடி அணியிலுள்ள ஜெயக்குமாருக்கு எதிராக கச்சை கட்டுவது அதிர்வலைகளை உண்டாக்கியுள்ளது.