Aug 28

கசிப்பு உற்பத்தியில் ஈடுபட்டிருந்த இருவர் கைது

அம்பாந்தோட்டை - வீரகெட்டிய பிரதேசத்தில் கசிப்பு உற்பத்தியில் ஈடுபட்டிருந்த இருவரை  வீரக்கொட்டிய பொலிஸார் கைதுசெய்துள்ளனர்.


இந்நிலையில் இருவரும்  வலஸ்முல்ல நீதவான் நீதிமன்றில் இன்று ஆஜர்படுத்திய வேளை நீதவான் அவர்களை பொலிஸ் தடுப்பு காவலில் எடுத்து விசாரிக்க உத்தரவிட்டுள்ளார்.3

இச்சம்பவத்தின் போது 33 மற்றும் 50 வயதுடைய கொடுகொட மற்றும் ஏக்கல பகுதிகளைச் சேர்ந்த சமரசிங்க ஹிருளு பதிரனலாகே சஞ்சீவ சில்வா என்பவரும், பொல்வத்தே அதுல கீர்த்தி கொஸ்தா என்பவருமே இவ்வாறு கைதுசெய்யப்பட்டுள்ளனர். 

மீதெனிய பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பல்லே பகுதியில் சட்டவிரோதமான முறையில் கசிப்பு உற்பத்தியில் ஈடுபட்டுள்ளதாக வீரக்கெட்டிய பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற விசேட தகவலொன்றுக்கமைய மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போதே குறித்த இருவரும் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

மேலும் குறித்த இருவரையும் கைதுசெய்த வேளையில் கசிப்பு உற்பத்தி மேற்கொள்ளப்பட்டிருந்த இடத்திலிருந்து மதுசாரம் 792 லீற்றரும், கசிப்பு 735 லீற்றரும், எரிவாயு அடுப்பு 5, எரிவாயு சிலின்டர் 16, நீர் இரைப்பு மோட்டர் 1, பிளாஸ்டிக் நீர் பத்திரங்கள் 21, தகர பெரல்கள் 5 மற்றும் பிளாஸ்டிக் பெரல்கள் 39 வம் பொலிஸாரால் மீட்கப்பட்டுள்ளன. 

இந்நிலையில் குறித்த இருவரும் கைதுசெய்யப்பட்டு இன்று வலஸ்முல்ல நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டனர். இதன்போது நீதவான் அவர்களை பொலிஸ் தடுப்பு காவலில் எடுத்து விசாரணைகளை மேற்கொள்ள உத்தரவிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.