Aug 28

யாழ்ப்பாணத்துக்கு நேராக சூரியன்; மக்களே அவதானம்!

இன்றிலிருந்து எதிர்வரும் சில நாட்களுக்கு இலங்கைக்கு நேராக சூரியன் உச்சம் கொடுக்கவுள்ளதாக இலங்கை வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.


சூரியனின் தெற்கு நோக்கிய இயக்கம் காரணமாக இந்த ஆண்டு ஒகஸ்ட் 28ஆம் திகதியாகிய இன்றும் எதிர்வரும் செப்டம்பர் 7ஆம் திகதியும் இலங்கையின் அகலாங்குகளுக்கு நேராக சூரியனின் உச்சம் காணப்படும்.

இதன்படி இன்று நண்பகல் 12.11 அளவில் யாழ்ப்பாணத்தில் சில பிரதேசங்களில் சூரியனின் உச்சம் காணப்படும்.

காரைநகர் களபூமி, கோண்டாவில் மற்றும் நாவற்காடு ஆகிய இடங்களுக்கு அண்மையிலுள்ள பிரதேசங்களுக்கு மேலாக சூரியன் உச்சம் கொடுக்குமென திணைக்களம் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.

சூரியன் உச்சம் கொடுக்கும் காலத்தில் வெறும் உடலுடன் வெளியில் நிற்பதைத் தவிர்க்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்