Aug 28

ரொறொன்ரோ பகுதியில் கடும் வெப்பநிலை எச்சரிக்கை

இந்த வாரத்தின் இறுதியுடன் பாடசாலைகளுக்கான கோடை விடுமுறை நிறைவு பெறுகின்ற நிலையில், ரொறொன்ரோ உட்பட அதனை அண்டிய பிரதேசங்களுக்கு எதிர்வரும் தினங்களில் கடும் வெப்ப எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

heat27இந்நிலையில் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) முதல் எதிர்வரும் புதன்கிழமை வரை அப்பகுதியில் கடுமையான வெப்பமான காலநிலை காணப்படும் என கனடா சுற்றுச்சூழல் அதிகாரசபை தெரிவித்துள்ளது.

அந்தவகையில் வெப்பநிலை 31 C இல் இருந்து 40 வரை இருக்க கூடும் என்றும், இரவு வேளைகளில் 20 C ஆக குறைவடைய கூடும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் இரவு வேளைகளில் குறிப்பாக 8 மணிக்கு பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்வதற்கான வாய்ப்பு உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுகின்றது. இதன் போது பொதுமக்களை அவதானம் இருக்குமாறு சுற்றுச்சூழல் அதிகாரசபை கேட்டுக்கொண்டுள்ளது.

அத்துடன் இந்த கடும் வெப்பமான காலநிலை, எதிர்வரும் புதன்கிழமைக்கு பின்னர் வழமைக்கு திரும்பும் எனவும் கனடா சுற்றுச்சூழல் அதிகாரசபை தெரிவித்துள்ளது.

கடந்த வாரங்களில் குறித்த பகுதிகளில் கடுமையான மழை பெய்ததுடன், இதனால் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் போக்குவரத்துக்களும் பதிப்படைந்தமை குறிப்பிடத்தக்கது.