Aug 28

இந்த வார நாமினேஷன் லிஸ்டில் இவர்கள் இல்லையா? இதற்காக தான் ஐஸ்வர்யா, யாஷிகாவை பிக்பாஸ் காப்பாற்றுகிறாரா?

65 நாட்களை கடந்து சென்று கொண்டிருக்கும் பிக்பாஸ் நிகழ்ச்சி இப்போது தான் சற்று விறுவிறுப்பாக இருக்கிறது. பல அட்டகாசங்களை செய்த மகத் அனைவரும் எதிர்பார்த்தது போலவே வெளியேற்றப்பட்டார். 

இதனை தொடர்ந்து யாஷிகா அல்லது ஐஸ்வர்யா நாமினேஷன் லிஸ்டில் இடம்பெறுவார்கள் எனவும், யாராவது ஒருவரை வெளியேற்றி விடலாம் என நம்பியிருக்கும் வேளையில், பிக்பாஸின் நடவடிக்கை பலரையும் மன கஸ்டத்திற்கு உள்ளாக்கியிருக்கிறது.

இந்த வாரம் நாமினேஷன் நடத்தப்படவே இல்லை. அதனால் யாஷிகா மற்றும் ஐஸ்வர்யா ஆகியோர் எலிமினேஷனில் இருந்து தப்பிவிட்டனர். சென்ற வார உத்தமவில்லன் டாஸ்க் சரியாக செய்யாத டானியல், பாலாஜி, ஜனனி ஆகியோர் மட்டும் நேரடியாக எலிமினேஷனிற்கு தேர்வாகி இந்த வாரம் எலிமினேஷன் லிஸ்டில் உள்ளமை குறிப்பிடத்தக்கது.