Aug 28

க.பொ.த உயர்தரப் பரீட்சை பெறுபேறுகள் தொடர்பில் புதிய தகவல் ?

இந்த வருடம் இடம்பெற்ற க.பொ.த உயர்தரப் பரீட்சை பெறுபேறுகளை வெளியிடுவதில் காலதாமதம் ஏற்படலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.


விடைத்தாள் மதிப்பீட்டுப் பணிகளில் ஈடுபட்டு வரும் ஆசிரியர்கள் பற்றாக்குறையினால், இந்த காலதாமதம் ஏற்படுவதற்கான சாத்தியம் காணப்படுவதாக அகில இலங்கை ஆசிரியர் ஒன்றியம் தெரிவித்துள்ளது.

குறைந்தளவான கொடுப்பனவு வழங்குதல் உள்ளிட்ட பல்வேறு காரணிகளினால் ஆசிரியர்கள் விடைத்தாள் மதிப்பீட்டு நடவடிக்கைகளில் ஆர்வம் காட்டுவதில்லை எனவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.