Jun 07

16 வயதில் திருமணம்... 38 குழந்தைகளுக்கு தாய்.. தனியாக போராடும் அதிசய பெண்மணி!

சாதாரணமாக ஒரு குடும்பத்தில் 2 அல்லது 3 குழந்தைகள் இருக்கும். தற்போது உள்ள காலகட்டத்தில் யாரும் ஒரு குழந்தைக்கு மேல் பெற்றுக்கொள்வதில்லை. ஆனால் உகாண்டாவில் Mariam Nabatanzi என்னும் இவர் 38 குழந்தைகளை பெற்றுள்ளார்.

இவருக்கு 14 வயதில் திருமணம் நடந்துள்ளது. ஏனெனில் இவர் Hyper Ovulation பிரச்சனையால் பாதிக்கப்பட்டுள்ளார். அதாவது இவரது கருப்பைகள் ஒவ்வொரு சுழற்சிகளிலும் ஒரு முட்டைக்கு மேல் வெளியேற்றுகின்றன, இதனால் இவர் ஒரு பிரவசத்தின் போது இரட்டையர்கள், மூவர்கள், நான்கு குழந்தைகள் பிறக்குமாம்.

மேலும் இவருக்கு மொத்தம் 44 குழந்தைகள் பிறந்ததாம் அதில் ஆறு குழந்தைகள் இறந்துவிட்டது. எந்த ஒரு உதவியும் இல்லாமல் தனியாகவே இந்த 38 குழந்தைகளையும் வளர்க்கிறார். எனக்கு இந்த குழந்தைகள் "ஆசீர்வாதம், சுமை அல்ல" என்று அவர் கூறுகிறார்.