Jun 07

கனேடியப் பாதுகாப்புக் கொள்கையில் மாற்றங்கள்

இன்று வெளியிடப்படவுள்ள கனேடிய  பாதுகாப்பு கொள்கை மீளாய்வு பலத்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது,

ஈராக் மற்றும் சிரியா ஆகிய நாடுகளில் ஐ.எஸ் அமைப்புக்கு எதிராக மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகள் நீடிக்கப்படுமா, கனேடிய இராணுவத்திற்கான நிதி ஒதுக்கீடு போன்ற விடயங்கள் தொடர்பான கொள்கைகள் இன்று வெளியிடப்படலாம் எனவும் எதிர்பார்க்கப்படுகின்றது.  

மத்திய கிழக்குப் பிரதேசங்களில் நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ள கனேடியப் படைகளுக்கான நடவடிக்கைக் காலம் இந்த மாத இறுதியுடன் முடிவுக்கு வரவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையிலேயே அந்த காலத்தை நீடிக்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பை கனேடிய இராணுவத்தின் அந்த நடவடிக்கைக்கான கட்டளைத் தளபதி பிரிகேடியர் ஜெனரல் டான் மாக்சிசாக் வெளியிட்டுள்ளார்.

இது தொடர்பில் மேலும் கருத்து வெளியிட்டுள்ள அவர், நீண்டகாலமாக எதிர்பார்க்கப்பட்ட கனடாவின் பாதுகாப்பு கொள்கை மீளாய்வு எதிர்வரும் புதன்கிழமை இடம்பெறவுள்ள நிலையிலேயே தாம் இந்த எதிர்பார்ப்பைக் கொண்டிருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.