Aug 27

ரயில்வே தொழிற்சங்கங்கள் இன்று மாலை முடிவு

அடுத்த கட்ட நடவடிக்கைகள் தொடர்பில், இன்று (27) மாலை தீர்க்கமான முடிவெடுக்கப்படுமென, ரயில்வே தொழிற்சங்கங்கள் தெரிவித்துள்ளன.  


தங்களுடைய சம்பள முரண்பாடுகள் தொடர்பில், பி​ரதான ரயில் தொழிற்சங்கங்கள் சிலவற்றின் பிரதிநிதிகளுக்கும், சம்பள ஆணைக்குழுவின் அதிகாரிகளுக்கும் இடையில், இன்று இடம்பெறவிருக்கும் பேச்சுவார்த்தையை அடுத்தே, முடிவெடுக்கப்படுமென, அந்தத் தொழிற்சங்கங்களின் பிரதிநிதிகள் அறிவித்துள்ளனர். 

தங்களுடைய சம்பள உயர்வுப் பிரச்சினை தொடர்பில், ஜனாதிபதி மற்றும் சம்பள ஆணைக்குழுவின் அதிகாரிகள் ஆகியோருக்கிடையில் இடம்பெற்ற பேச்சுவார்த்தை தோல்வியில் முடிவடைந்தமையால் மற்றொரு சுற்றுப்பேச்சுவார்த்தை இன்று முன்னெடுக்கப்படவுள்ளது.  இன்றைய பேச்சுவார்த்தையில் ஏற்றுக்கொள்ளகூடிய முடிவு கிடைக்காவிடின், இன்று (27) நள்ளிரவு முதல் வேலைநிறுத்தப் போராட்டத்தில் குதிக்கவுள்ளதாக, அந்த தொழிற்சங்கங்கள் அறிவித்துள்ளது. 

எனினும், ஜனாதிபதியுடன் இடம்பெற்ற பேச்சுவார்த்தை -யின் போது, ரயில்வே ஊழியர்களின் சம்பள பிரச்சினைக்குத் தீர்வு காண்பதற்கு இரண்டு மாத காலஅவகாசம் தேவையென்று தெரிவித்திருந்த ஜனாதிபதி, இந்தப் பிரச்சினையை தீர்ப்பதற்கான அதிகாரத்தை சம்பள ஆணைக்குழுவுக்கு வழங்கியிருந்தார்.