Aug 27

சிகிச்சை அளிக்காமல் கொல்லப்பட்டாரா ஜெயலலிதா? - 'நமது அம்மா' பகீர் தகவல்.!

தமிழக முன்னாள் முதல்வரும், மறைந்த அதிமுகவின் தலைவியான ஜெயலலிதா கடந்த 5 டிசம்பர் 2016 அன்று உடல்நலக்குறைவின் காரணமாக உயிரிழந்தார் என அவர் சிகிச்சை பெற்றுவந்த அப்போலோ மருத்துவமனையால் அறிவிக்கப்பட்டது.


அதே சமயம், ஜெயாவின் மரணத்தில் தங்களுக்கு சந்தேகம் உள்ளதாகவும் எனவே ஜெயா மரணம் குறித்து நடுநிலையானதோர் நீதி விசாரணை நடத்தப்பட வேண்டுமென பல தரப்புகள் கோரிக்கை விடுத்த நிலையில், தற்போதைய முதல்வரும், அதிமுகவின் இணை ஒருங்கிணைப்பாளருமான எடப்பாடி, ஓய்வு பெற்ற நீதிபதி ஆறுமுகசாமியைக்கொண்டு ஜெயாவின் மரணம் குறித்து விசாரிக்க நீதி விசாரணை கமிஷன் அமைத்து உத்தரவிட்டார். அந்த விசாரணை கமிஷன் விசாரணையை மேற்கொண்டுவருகிறது.

இந்த நிலையில், அப்போலோ மருத்துவமனையில் ஜெயலலிதாவுக்கு உண்மையில் சிகிச்சை அளிக்கப்பட்டதா அல்லது அவருக்கு சிகிச்சை அளிக்கப்படாமல் வேண்டுமென்றே ஜெயா மரணத்தை நோக்கி தள்ளப்பட்டாரா? என கவிதை வெளியிட்டுள்ளது ஆளும் எடப்பாடி - ஓபிஎஸ் தரப்பின் அதிகாரபூர்வ நாளிதழான நமது அம்மா.

ஜெயா மரணமடைந்தால் அந்த இடத்தை தன் வசப்படுத்திட முயன்ற சசிகலா தரப்பே மேற்கண்ட செயலை செய்திருக்க கூடுமென்ற ரீதியில் நமது அம்மா நாளிதழ் கவிதை வெளியிட்டுள்ளது அரசியல் வட்டாரத்தில் அனலை கிளப்பியுள்ளது.