Aug 27

பெண் மீது முகமூடி கொள்ளையர்கள் தாக்குதல்!

கனடா – ஹட்சன் நகரில் வசிக்கும் நட்டலே பொய்ரியர் என்பவரின் வீட்டுக் கதவை உடைத்து அடையாளந்தெரியாத இருவர் தக்கியுள்ளனர்.

கியூபெக்கிலுள்ள ஹட்சன் நகரில் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) இரவு தனது வீட்டில் உறங்கிக்கொண்டிருந்த தன்னை முகமூடி அணிந்த இருவர் தாக்கியுள்ளதாக  பொலிஸாரிடம் நட்டலே முறைப்பாடு செய்துள்ளார்.

வீட்டில் தனியாக இருந்தபோது பாரிய சத்தமொன்று கேட்டதாகவும், அதன் பின்னர் தனது நாயை தேடி அறைக்கு வெளியே வந்தபோது முகமூடி அணிந்த இருவர் கதவை உடைத்துக்கொண்டிருந்தததை கண்டதாக நட்டலே தனது முறைப்பாட்டில் கூறியுள்ளார்.

அவர்களைக் கண்டு கூச்சலிட முற்பட்ட போது கழுத்தை நெறித்து பலமாக தாக்கியதாகவும், வீட்டில் பணம் இருக்கும் இடத்தை காட்டுமாறு கேட்டதாகவும் குறிப்பிட்டுள்ளார். குறித்த கொள்ளையர்கள் இருவரும் ஃபிரென்ச் மொழியில் உரையாடியதாகவும் பொலிஸாரிடம் சுட்டிக்காட்டினார்.

அதன் பின்னர் அயலவர்கள் வந்து அவரைக் காப்பாற்றியுள்ளனர். நட்டலேயின் வீட்டில் சீ.சீ.ரி.வி. கமரா பொருத்தப்பட்டுள்ள நிலையில், அதன் காட்சிகளைப் பெற்று பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.