Aug 27

வேலியே பயிரை மேய்ந்த கதை: தான் மீட்ட பாலியல் தொழிலாளிகளிடமே அத்து மீறிய பொலிஸ் அதிகாரி

1988ஆம் ஆண்டு முதல் புகழ் பெற்ற பொலிஸ் அதிகாரியாக வலம் வந்த ஒருவர் தான் மீட்ட பாலியல் தொழிலாளிகளிடமே அத்து மீறியதால் தான் சம்பாதித்த நல்ல பெயரையும் இழந்து திருமண வாழ்வும் நிலை குலைந்து மொத்த எதிர்காலத்தையும் இழந்து போய் நிற்கிறார்.

ரகசியமாக பாலியல் தொழில் நடத்தும் ஆண்களால் துஷ்பிரயோகம் செய்யப்பட்ட இரண்டு பெண்களை விசாரிப்பதற்காக சென்றவர் வான்கூவரைச் சேர்ந்த James Fisher.

ஆனால் தங்களை துஷ்பிரயோகம் செய்தவர்களிடமிருந்து மீட்டதால் அவரை நம்பி வந்த அந்த பெண்களிடம் அத்து மீறியுள்ளார் அவர்.

14 வயதே ஆன சிறுமிகளை வைத்து பாலியல் செய்பவன் Reza Moazami, மிக மோசமாக, கோரமாக பாலியல் துஷ்பிரயோகம் செய்யப்பட்டு பின் அவனிடமிருந்து மீட்கப்பட்டவள் ஒரு பெண்.

இன்னொருத்தி Michael Bannon என்னும் பாலியல் தொழில் நடத்துபவனிடம் சிக்கி சுமார் 200 பேரால் துஷ்பிரயோகிக்கப்பட்டவள்.

இவர்கள் இருவரையும் தனியாக சென்று சந்தித்திருக்கிறார் Fisher. இது விதிகளை மீறிய செயல், ஏனென்றால் பெண் குற்றவாளிகள் மற்றும் சாட்சிகளை சந்திக்கச் செல்லும்போது இரண்டு பொலிஸ் அதிகாரிகள் சேர்ந்துதான் செல்ல வேண்டும்.

இருவரையும் மீட்ட Fisherஐ அவர்கள் நம்பி வந்தபோது அவர் அவர்களது நம்பிக்கையை பயன்படுத்தி அவர்களிடம் அத்து மீறியுள்ளார்.

அவரது குடும்பத்தார், நண்பர்கள், சகாக்கள் என ஒரு பட்டாளமே அவர் எவ்வளவு நல்லவர் என சாட்சியமளித்தும், நீதிபதி அதை ஏற்றுக் கொள்ளவில்லை.

எந்த Fisher இவ்வளவு நல்ல பெயர் எடுத்திருக்கிறாரோ அதே Fisherதான் இந்த பெண்களிடம் அத்து மீறியுள்ளார் என்று தெரிவித்த நீதிபதி Robert Hamilton, மற்றவர்களுக்கு தெரியாத அவரது இன்னொரு முகம் வெளியே வந்திருக்கிறது என்று கூறினார்.

ஏற்கனவே மோசமாக நடத்தப்பட்ட அந்த பெண்கள் தன் மீது வைத்த நம்பிக்கையை பயன்படுத்தி அவர் அத்து மீறியுள்ளார் என்று தெரிவித்துள்ள நீதிபதி, Fisherக்கு 20 மாதங்கள் சிறைத்தண்டனை விதித்து உத்தரவிட்டுள்ளார்.