Aug 27

வேலணை பெருங்குளம் ஸ்ரீ முத்துமாரியம்மன் இரதோற்சவம் !

தீவகத்தில் பிரசித்தி பெற்ற-வேலணை பெருங்குளம் ஸ்ரீ முத்துமாரி அம்மனின் வருடாந்த மகோற்சவம் கடந்த 16.08.2018 வியாழகிழமை  கொடியேற்றதுடன் ஆரம்பமாகி,தொடர்ந்து பத்து  தினமும் திருவிழாக்கள் சிறப்பாக இடம்பெற்று வந்ததுடன் 25.08.2018  சனிக்கிழமை அன்று வேலணை பெருங்குளம் முத்துமாரி அம்மன் தேரேறி வீதியுலா வந்த  நிகழ்வு  இடம்பெற்றது .

நாட்டின் பல பாகங்களிலிருந்தும்,புலம் பெயர்ந்த நாடுகளிலிருந்தும் வருகை தந்த பல்லாயிரக்கணக்கான முத்துமாரி அம்மனின் பக்தர்கள் தேர் திருவிழாவில்  பங்குபற்றியதுடன்  காவடிஎடுத்தும் , கற்பூரசட்டி  எடுத்தும்  தங்களது நேர்த்தி கடன்களை  நிறைவேற்றி இருந்தமையும்  குறிப்பிடத்தக்கது .