Aug 27

பிளாக்பெரி கீ2 எல்.இ. வெளியீட்டு விவரங்கள் வெளியாகின

பிளாக்பெரி நிறுவனத்தின் கீ2 ஃபிளாக்‌ஷிப் ஸ்மார்ட்போன் கடந்த மாதம் அமெரிக்காவின் நியூயார்க் நகரில் அறிமுகம் செய்யப்பட்டதை தொடர்ந்து கீ2 விலை குறைந்த மாடலான கீ2 லைட் ஸ்மார்ட்போனின் விவரங்கள் இணையத்தில் லீக் ஆனது. இந்நிலையில் இந்த ஸ்மார்ட்போன் பெர்லின் நகரில் நடைபெற இருக்கும் ஐ.எஃப்.ஏ. விழாவில் அறிமுகம் செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

புதிய பிளாக்பெரி ஸ்மார்ட்போன் லூனா என்ற குறியீட்டு பெயர் கொண்டிருக்கும் தெரிவிக்கப்பட்டிருந்தது. இத்துடன் 3:2 ஆஸ்பெக்ட் ரேஷியோ கொண்ட டிஸ்ப்ளே, 4 அடுக்கு க்வெர்டி பேக்லிட் கீபோர்டு கொண்டிருக்கும் என கூறப்படுகிறது.

பிளாக்பெரி கீ2 எல்.இ. மாடலில் ஸ்னாப்டிராகன் 636 சிப்செட், 4 ஜிபி ரேம் கொண்டிருக்கும் என்றும் 13 எம்பி + 5 எம்பி டூயல் பிரைமரி கேமராக்களை கொண்டிருக்கும் என கூறப்படுகிறது. 

புதிய விலை குறைந்த ஸ்மார்ட்போன் ரெட், புளூ மற்றும் காப்பர் என மூன்று நிறங்களில் கிடைக்கும் என தகவல் வெளியாகியுள்ளது. இதனுடன் வெளியாகியிருக்கும் புகைப்படங்களில் புதிய ஸ்மார்ட்போன் புளூ அல்லது பிளாக் நிற ஃபினிஷ் செய்யப்பட்டு பக்கவாட்டுகளில் சிவப்பு நிறம் கொண்டிருக்கிறது.