Aug 27

நியூஸிலாந்து நாட்டில் இறந்த நிலையில் கரை ஒதுங்கிய உலகின் மிகப் பெரிய ஸ்குவிட்

நியூஸிலாந்து நாட்டில் உலகின் மிகப் பெரிய ஸ்குவிட் எனப்படும் கடல் வாழ் உயிரினம் இறந்த நிலையில் கரை ஒதுங்கியுள்ளது. சவுத் வெலிங்டன் கடற்கரைப் பகுதியில் கரை ஒதுங்கியுள்ள இந்த உயிரினம் சுமார் 5 மீட்டர் நீளம் கொண்டதாகக் காணப்படுகிறது. 

சராசரியாக 6 முதல் 10 அடி நீளம் வளரும் தன்மை கொண்ட ஸ்குவிட்கள் மத்தியில் 17 அடி நீளம் கொண்ட ஸ்குவிட் இருப்பது கடலியல் ஆய்வாளர்கள் இடையே ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் இறந்து கரை ஒதுங்கிய ஸ்குவிட்டை பதப்படுத்தி அருங்காட்சியகத்தில் வைக்க நியூஸிலாந்து அரசு முடிவு செய்துள்ளது.