Aug 27

ரொறன்ரோவில் இருவேறு பகுதிகளில் துப்பாக்கிச் சூடு

ரொறன்ரோவில் இருவேறு பகுதிகளில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் 2 பேர் படுகாயமடைந்துள்ளனர்.

கிழக்கு Eglinton அவனியூ மற்றும் Brimley வீதி ஸ்கார்பரோவில் (ஞாயிற்றுக்கிழமை) அதிகாலை 4 மணியளவில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.

குறித்த துப்பாக்கிச் சூட்டில், படுகாயமடைந்தவர் உயிருக்கு ஆபத்தான நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

அத்துடன், இரவு 7:20 க்கு Hurontario Street பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் 20 வயது இளைஞர் ஒருவர் படுகாயமடைந்துள்ளனர்.

இதன் பின்னர் சம்பவ இடத்திற்கு சென்ற பொலிஸார் அவரை மீட்டு வைத்தியசாலையில் அனுமதித்தனர்.

மேலும் இச் சம்பவம் தொடர்பில் தகவல் தெரிந்தால் தமக்கு அறிவிக்குமாறு பொலிஸார் கேட்டுக்கொண்டுள்ளனர்.