Jun 07

கனேடியர்களின் பாதுகாப்பு உறுதி செய்யப்படும்

ஜூலை முதலாம் திகதி கனடாவின் 150ஆவது தேசிய தின நிகழ்வுகளின் போது கனேடியர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் வகையிலான அனைத்து திட்டங்களும் முன்னெடுக்கப்பட்டு வருவதாக பொதுப் பாதுகாப்புத்துறை அமைச்சர் ரால்ப் குட்டேல் தெரிவித்துள்ளார்.

அதன்படி, நாடு எதிர்நோக்கும் அச்சுறுத்தல்கள் குறித்து தொடர்ந்து பரிசீலனை செய்யப்பட்டு வருவதாக, நேற்று (திங்கட்கிழமை) இடம்பெற்ற அமைச்சரவையின் பாதுகாப்பு குழுக் கூட்டத்தில் கலந்துகொள்வதற்கு முன்னர் கருத்து தெரிவித்த அவர் குறிப்பிட்டார்.

அதேவேளை, பிரித்தானியாவில் அண்மையில் இடம்பெற்ற பயங்கரமான தாக்குதலை கண்டு தாம் அஞ்சப் போவதில்லை என்றும் தெரிவித்தார்.

அதேவேளை, கனடாவின் 150ஆவது தேசிய தின நிகழ்வுகளின் போது, அதனை சீர்குலைக்கும் வகையில் தாக்குதல்கள் திட்டமிட்டிருப்பின் அதனை எதிர்ப்பதற்கான அனைத்து நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்படும் என்றும் ஒட்டாவா மேயர் குறிப்பிட்டார்.