Mar 15

கனடாவில் வசிக்கும் இலங்கை வர்த்தகர்கள் - வடக்கு ஆளுநர் சந்திப்பு

நாட்டிற்கு வருகை தந்துள்ள கனேடிய பாராளுமன்ற உறுப்பினர்கள் சிலரும், கனடாவில் வசிக்கும் இலங்கை வர்த்தகர்கள் சிலரும் இன்று வட மாகாண ஆளுநரை சந்தித்துக் கலந்துரையாடினர்.

வட மாகாண ஆளுநர் ரெஜினோல்ட் குரேயின் அலுவலகத்தில் இந்த சந்திப்பு இடம்பெற்றது.

வட மாகாணத்தில் முதலீடு செய்வது தொடர்பான ஆய்வினை மேற்கொள்வதற்காகவே இந்த சந்திப்பு இடம்பெற்றுள்ளது.