Aug 27

மகளை இறுதியாக ஒருமுறை சந்திக்க வாய்ப்பு கிடைக்காதா? – மேர்கன் மார்கலின் தந்தை

தனது மகளை இறுதியாக ஒரேயொரு முறையாவது சந்திக்க வாய்ப்பளிக்குமாறு சசெக்ஸ் சீமாட்டி மேர்கன் மார்கலின் தந்தையான தோமஸ் மார்கல் கோரிக்கை விடுத்துள்ளார்.

பிரித்தானிய இளவரசரை மேர்கன் மார்கல் கரம்பிடித்ததைத் தொடர்ந்து, தன்னை ஒருமுறையேனும் சந்திக்கவில்லையென  தோமஸ் மார்கல்  (வயது-74) புலம்பி வருவதாக அவருடைய நண்பர் குறிப்பிட்டுள்ளார்.

“எனது மகளை நான் மிகவும் நேசிக்கிறேன்.  அவரை இறுதியாக ஒரு முறையாவது வாரி அணைக்க வேண்டும். அவள் எனக்கு எப்போதும் பெறுமையினையே தேடித் தந்தார். அவளை நினைக்கும் போது நான் பெருமைப்படுகிறேன். நான் எந்நளவு அதிகமாக என் மகளை நேசிக்கிறேன் என்று அவளுக்கு கூற வேண்டும்.

இதயச் சத்திர சிகிச்சையினை செய்து நான் படுக்கையில் இருந்த வேளையில், அவருடைய வாழ்க்கையின் மிக விஷேட தினத்தில் அவருடன் சேர்ந்து நடக்க தவறியதையிட்டு நான் மிகவும் மனமுடைந்து போனேன். மற்றைய உறவினர்கள் அவரின் மகிழ்ச்சிக்கு விலை பேசி பணம் சம்பாதிக்க எண்ணுகிறார்கள். அவர்களை நான் முற்றிலும் வெறுக்கின்றேன். என் மகளை இறுதியாக சந்திக்க ஒரே ஒரு வாய்ப்பு கிட்டாதா?” என்று தோமஸ் மார்கல் கண்ணீருடன் தெரிவித்ததாக  அவருடைய நண்பர் குறிப்பிட்டுள்ளார். அமெரிக்காவில் தோமஸை சந்தித்த போது இவ்வாறு புலம்பியதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

ஹரி மற்றும் மேர்கன் மார்கலின் திருமணத்தின் போது, தோமஸ் மார்கல் சுகயீனமுற்றிருந்தார். இதனால் திருமணத்தில் கலந்துகொள்ளாத அதேவேளை, அதன் பின்னர் தனது மகளுடனான தொடர்பு துண்டிக்கப்பட்டதென தெரிவித்து வந்தமை குறிப்பிடத்தக்கது.