Aug 27

நல்லாட்சி அரசாங்கத்தை வீட்டிற்கு அனுப்ப மஹிந்தவின் புதிய வியூகம்!

நல்லாட்சி கூட்டு அர­சாங்­கத்தை எவ்­வாறு வீட்­டுக்கு அனுப்­பிவைக்­கின்றோம் என்­ப­தனை வர­வு ­செ­ல­வுத்­திட்டம் மீதான வாக்­கெ­டுப்பில் பாருங்கள் என முன்னாள் ஜனாதிபதி சூளுரைத்துள்ளார். நாங்கள் எங்கு இருக்­கிறோம் என இவர்­க­ளுக்கு தெரியும். அத்­துடன் சரி­யான முறையில் தேர்­தல்­களை அர­சாங்கம் நடத்­த­வேண்டும்.


இல்­லா­விடில் பாரா­ளு­மன்­றத்தைக் கலைத்­து விட்டு பொதுத் தேர்­தலை நடத்­த­வேண்டும் என்று முன்னாள் ஜனா­தி­பதி மஹிந்த ராஜ­பக்ஷ மைத்திரி, ரணில் தலைமையிலான அரசாங்கத்தை எச்சரித்துள்ளார். ஜனா­தி­பதி தேர்தல் அறி­விக்­கப்­பட்டால் யார் எமது வேட்­பாளர் என்­பதை அறி­விப்போம் எனத் தெரிவித்த அவர் அது­வரை ஏன் யார் என்பதை அறிந்து கொள்ள அரசாங்கம் அவ­சரப்பட வேண்டும் எனவும் கேள்வி எழுப்பியுள்ளார்.

உள்­ளூ­ராட்சி மன்றத் தேர்­தலை நடத்த இந்த அர­சாங்கம் அச்­சப்­பட்­டது. தற்­போது மாகாண சபைத் தேர்­தலை பிற்­போட பாரிய தந்­தி­ரங்­களை மேற்­கொள்­கி­றது எனவும் குற்றம் சாட்டியுள்ளார்.

மக்­களின் இறை­மையில் மிக­முக்­கி­ய­மா­னது தேர்­த­லாகும். அந்தத் தேர்தல் உரி­மையை தற்­போது அர­சாங்கம் தராமல் இருக்­கி­றது. அப்­ப­டி­யி­ருக்­கும்­போது நாங்கள் எவ்­வாறு எமது வேட்­பா­ளரை அறி­விப்­பது? என்றும் அவர் கேள்­வி­யெ­ழுப்­பி­யுள்ளார்.