Aug 27

கோர விபத்து இரண்டு இளைஞர்கள் பலி-ஐவர் படுகாயம்!


பெருநாள் விடுமுறைக்கு நுவரெலியா சென்று திரும்பிய குழுவினர் பயணித்த வான், பொலன்னறுவையின் மின்னேரியா பகுதியில் விபத்துக்குள்ளாகியுள்ளது. இந்த விபத்தில் வானில் பயணித்த கதுறுவெல பகுதியை சேர்ந்த 2 இளைஞர்கள் பரிதாபமாக உயிரிழந்துள்ளதாக மின்னேரியா பொலிஸார் தெரிவிக்கின்றனர்.விபத்தில் ஏ.எம்இன்ஷாப்வயது 28) மற்றும் இம்ஷித் வயது 29) ஆகியோரே உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.இதேவேளை விபத்தில் காயமுற்ற ஐந்து இளைஞர்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை மின்னேரியா பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்