Aug 27

மாளிகாவத்தை துப்பாக்கிச் சூடு, பாதாள உலக குழுக்கள் இடையேயான மோதலா?

மாளிகாவத்தை - ஜூம்மா சந்தி பகுதியில் நேற்று இடம்பெற்ற துப்பாக்கி சூட்டு சம்பவத்தில் பெண்ணொருவர் மரணமடைந்தார்.உந்துருளியில் வந்த இருவர் இந்த துப்பாக்கி பிரயோகத்தை மேற்கொண்டு தப்பிச் சென்றதாக காவல்துறையினர் தெரிவிக்கின்றனர்.துப்பாக்கி பிரயோகத்தில் பலியானவர் மாளிகாவத்தையைச் சேர்ந்த 31 வயதானவர் என தெரிவிக்கப்படுகிறது.

இந்த துப்பாக்கி பிரயோக சம்பவம் தொடர்பில் இதுவரையில் ஒருவரும் கைது செய்யப்படவில்லை.துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்துள்ளவர் பாதாள உலக குழுவின் தலைவர் மதூசின் உதவியார் ஒருவரின் மனைவி என காவல்துறை தெரிவித்துள்ளது.இதன்படி பாதாள உலக குழுக்கள் இடையேயான மோதலின் விளைவாக இந்த கொலை இடம்பெற்றிருக்கலாம் என காவல்துறை சந்தேகிக்கிறது.