Aug 25

சீனாவில் பிரபல ஓட்டலில் தீ விபத்து ; 18 பேர் பலி

சீனாவின் ஹார்பின் நகரில் அமைந்துள்ள பிரபல ஓட்டலில் ஏற்பட்ட தீ விபத்தில் 18 பேர் உயிரிழந்ததோடு. பலர் காயமடைந்துள்ளனர். 

சீனாவின் வடமேற்கு பகுதியில் உள்ள ஹார்பின் நகரில் ஹாட் ஸ்பிரிங்ஸ் ஓட்டல் அமைந்துள்ளது. இந்த ஓட்டலின் ஒரு தளத்தில் இன்று அதிகாலை திடீரென தீப்பிடித்தது. பின்னர் மற்ற தளங்களுக்கும் பரவி கொழுந்துவிட்டு எரியத் தொடங்கியது. 

இது குறித்து தீயணைப்புத்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டதையடுத்து தீயணைப்பு வீரர்கள் விரைந்து சென்று சுமார் 3 மணி நேரம் போராடி தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர். பின்னர் மீட்பு பணி இடம்பெற்றது.

இந்த தீ விபத்தில் 18 பேர் உயிரிழந்துள்ளதோடு. 19 பேர் காயங்களுடன் மீட்கப்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். தீ விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. 4 தளங்கள் கொண்ட ஓட்டலில் சுமார் 400 சதுர மீட்டர் பரப்பளவுக்கு தீயில் கருகியிருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன