Aug 25

3099 பேர் கைது


காவல்துறையினரால் நாடு முழுவதிலும் மேற்கொள்ளப்பட்ட 11 மணிநேர விசேட சுற்றிவளைப்பில் 3099 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக காவல்துறை ஊடக பேச்சாளர் ருவன் குணசேகர தெரிவித்துள்ளார்.கைதானவர்களில் 700 பேர் பிடி ஆணை பிறப்பிக்கப்பட்டிருந்தவர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.காவல்துறைமா அதிபரின் உத்தரவின் பேரில் நேற்று இரவு ஒன்பது மணி முதல் இன்று காலை 8 மணிவரை இந்த சுற்றிவளைப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது.