Mar 15

சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட் போட்டி; 140 ஆண்டுகள் நிறைவு

சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகள் ஆரம்பித்து  140 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளன.

அங்கீகரிக்கப்பட்ட முதல் சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட் போட்டி 1877ஆம் ஆண்டு மார்ச் 15ஆம் திகதி இங்கிலாந்து மற்றும் அவுஸ்திரேலிய அணிகளுக்கு இடையே மெல்போர்ன் மைதானத்தில் நடைபெற்றது. 

மார்ச் 19 வரை நடைபெற்ற இந்த டெஸ்ட் போட்டியில் ஆவுஸ்திரேலிய அணி 45 ஓட்டங்களினால் வெற்றி பெற்றது.

சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட் போட்டி ஆரம்பித்து இன்றுடன் 140 ஆண்டுகள் நிறைவு பெற்றுவிட்டது. இதனை சிறப்பிக்கும் விதமாக பிரபல தேடுபொறி நிறுவனமான கூகுள் சிறப்பு டூடுல் வெளியிட்டு கௌரவித்துள்ளது.

பந்து வீச்சாளர் பந்து வீசுவது போலவும், பேட்ஸ்மேன் அதனை அடிப்பது போலவும், பீல்டர்கள் அதனை தடுக்க முயல்வது போலவும் வடிவமைக்கப்பட்டுள்ள இந்த டூடுல் பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்துள்ளது.