Aug 25

பாப்பரசர் அயர்லாந்து விஜயம்: பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி கோரும் ஒளிப்பட காட்சி!

பாலியல் துஷ்பிரயோங்களினால் பாதிக்கப்பட்டவர்களின் ஒளிப்படங்கள் அடங்கிய காட்சிகள், அயர்லாந்து தலைநகர் டப்லினிலுள்ள பொது தபால் நிலையத்தில் திரையிடப்பட்டுள்ளன.

பரிசுத்தப் பாப்பரசர் பிரான்சிஸ், இன்று (சனிக்கிழமை) அயர்லாந்திற்கு விஜயம் செய்துள்ளார். இதன்போது அவர் பாதிக்கப்பட்டவர்களை சந்திக்கவுள்ள நிலையில், அதன் ஒரு அம்சமாக இந்த நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

பாதிக்கப்பட்டவர்களின் நிலை மற்றும் அவர்களுக்கு நீதி கிடைக்க வேண்டும் என்பதை மையப்படுத்தி, அவர்களது ஒளிப்படங்கள் அடங்கிய காட்சி திரையிடப்பட்டுள்ளது.

40 வருடங்களின் பின்னர் பாப்பரசர் ஒருவர் அயர்லாந்திற்கு விஜயம் செய்கின்றார். இந்நிலையில், டப்லின் நகர் மட்டுமன்றி சுற்று வட்டாரங்களிலுள்ள மக்கள் அனைவரும் பாப்பரசர் வலம் வரும் பகுதிகளில் குவிந்துள்ளனர்.

இரண்டு நாள் விஜயமாக டப்லினுக்கு வருகை தந்துள்ள பரிசுத்த பாப்பரசர், பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உள்ளானோரை தலைநகரின் பிரதான பூங்காவில் நாளைய தினம்   சந்தித்து பிரார்த்தனை நிகழ்வொன்றினையும் நடத்தவுள்ளார்.