Aug 25

இலங்கைக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுவரும் இந்திய மகளிர் அணி!

இந்திய மகளிர் கிரிக்கெட் அணி இலங்கை மகளிர் அணியுடன் மூன்று ஒரு நாள் சர்வதேச போட்டிகள் மற்றும் ஐந்து T-20 சர்வதேச போட்டிகள் கொண்ட தொடர்களில் விளையாடுவதற்காக செப்டம்பர் மாதம் இலங்கை வரவிருக்கின்றது.

செப்டம்பர் மாதம் 11 ஆம் திகதி ஆரம்பமாகும் இத்தொடர், இரண்டு வாரங்கள் நடைபெற்று செப்டம்பர் மாதம் 25 ஆம் திகதியுடன் நிறைவுக்கு வருகின்றது.

அதன் படி, செப்டம்பர் 11 – முதலாவது ஒரு நாள் போட்டி, காலி சர்வதேச மைதானத்திலும், செப்டம்பர் 13 – இரண்டாவது ஒரு நாள் போட்டி, காலி சர்வதேச மைதானதிலும், செப்டம்பர் 16 – சிலாபம் மேரியன்ஸ் மைதானதிலும், செப்டம்பர் 19 – முதலாவது T20 போட்டி, சிலாபம் மேரியன்ஸ் மைதானதிலும், செப்டம்பர் 21 – இரண்டாவது T20 போட்டி, கோல்ட்ஸ் கிரிக்கெட் கழக மைதானதிலும், செப்டம்பர் 22 – மூன்றாவது T20 போட்டி, கொழும்பு கிரிக்கெட் கழக மைதானதிலும், செப்டம்பர் 24 – நான்காவது T20 போட்டி, கொழும்பு கிரிக்கெட் கழக மைதானதிலும், செப்டம்பர் 25 – ஐந்தாவது T20 போட்டி, சிலாபம் மேரியன்ஸ் கிரிக்கெட் கழக மைதானதிலும் இடம்பெறவுள்ளது.

இந்திய மகளிர் கிரிக்கெட் அணி மற்றும் இலங்கை மகளிர் கிரிக்கெட் அணி ஆகியவை இறுதியாக, ஜூன் மாதம் இடம்பெற்றிருந்த ஆசியக் கிண்ணத் தொடரின் போட்டியில் விளையாடியிருந்தது. குறித்த போட்டியில் இந்திய மகளிர் அணி 7 விக்கெட்டுக்களால் இலங்கையை வீழ்த்தியிருந்தது.

இதேநேரம், குறித்த ஆசியக் கிண்ணத்தின் போட்டியே இரண்டு அணிகளும் இறுதியாக பங்குகொண்ட இறுதி சர்வதேச போட்டி என்பதும் குறிப்பிடத்தக்கது.