Aug 25

பொலிஸார் மோப்பநாய்கள் சகிதம் பாதுகாப்பு தீவிரம், விமா்சனத்திற்குள்ளான நல்லாட்சியும், அமைச்சரும்!

வவுனியா நகரசபை மண்டபத்தில் இன்று இடம்பெறவுள்ள பண்டாரவன்னியனின் 215ஆவது ஞாபகார்த்த நிகழ்வில் கலந்துகொள்வதற்காக அரச கரும மொழிகள் அமைச்சர் வருகைதரவுள்ளார். இதன் காரணமாக நகரசபை மண்டபத்தில் மோப்ப நாய்களுடன் பொலிசார் தீவிர பாதுகாப்பு கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். இச் செயற்பாடு நிகழ்விற்கு வருகை தந்துள்ள பலரின் விமர்சனத்திற்குள்ளாகியுள்ளதைக் காணக்கூடியதாக உள்ளது.


அரச கரும மொழிகள் அமைச்சர் வவுனியாவிற்கு வருவது புதிதல்ல பல தடவைகள் இங்கு வருகைதந்துள்ளார். இந்நிலையில் இன்றைய தினம் அவருக்கு பாதுகாப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளதையடுத்து பலர் விமர்சனங்களை முன்வைத்துள்ளதைக்காண முடிந்துள்ளது.

அமைச்சர் மனோகணேசன் தமிழ் பேசும் அமைச்சர், தமிழ் பிரதேசத்தில் இடம்பெறும் வரலாற்று நிகழ்விற்கு வருகை தரவுள்ளது பெருமைக்குரியதாக இருந்தாலும் நல்லாட்சி அரசாங்கத்தில் பாதுகாப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. இச் செயற்பாடானது நல்லாட்சியை ஏற்படுத்திய அமைச்சரையும் விமர்சனத்திற்குள்ளாகியுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.