Aug 25

இருமலுக்கு மருந்து எடுக்காதீர்கள்; இங்கிலாந்து ஆய்வாளர்கள் அவசர எச்சரிக்கை!

மனிதர்களின் நோய் எதிர்ப்பு சக்தியில் தளம்பல் நிலை ஏற்படும்போது பலவித உடலியல் மாறங்கள் நிகழ்வதுண்டு. அவை நிரந்தரமற்ற நோய்கள் எனவும் அழைக்கப்படுகின்றன.


குறிப்பாக இருமல், தும்மல், தடுமல் உள்ளிட்டவை அவ்வகையில் அடங்குபவை. இவற்றிலே எந்த நோய் வந்தாலும் அவற்றிலிருந்து மீள்வதற்கான எதிர்ப்பு சக்தியை எமது உடல் கொண்டிருக்கும். இவற்றிற்கு நாம் வைத்தியரை நாடிச் சென்று மருந்தெல்லாம் எடுக்கவேண்டிய தேவை இருக்காது.

இந்த நிலையில் இருமல் குறித்த புதிய ஆய்வுத் தகவல் ஒன்று வந்திருக்கின்றது.

இருமல் வரும் பட்சத்தில் உடனடியாக வைத்தியரை நாடக்கூடாதென இங்கிலாந்தின் நிபுணர்கள் ஆலோசனை வழங்கியுள்ளார்கள்.

முதலில் தேனையும், கை மருந்துகளையும் வழங்கி இருமலுக்கு சிகிச்சை வழங்குமாறு புதிய வழிகாட்டல் கோவைகளில் ஆலோசனை வழங்கப்பட்டுள்ளன.

இருமலுக்கு மருத்துவர்கள் நுண்ணுயிர் கொல்லிகளை பிரஸ்தாபிப்பது குறைவு. நுண்ணுயிர் கொல்லி மருந்துகளை கூடுதலாக பயன்படுத்துவதன் மூலம் நோய்க்கு சிகிச்சை அளிப்பது கடினமாகிறது. ஏனெனில் கிருமிகள் எதிர்ப்பு சக்தியை வளர்த்துக் கொள்வதாக நிபுணர்கள் கூறியுள்ளார்கள்.

இருமல் உள்ளிட்ட நோய்களுக்கு மருந்தெடுப்பதால் அதுசார்ந்த கிருமிகள் மருந்தை எதிர்க்கப் பழகிவிடும் என ஆய்வில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.