Aug 25

கியூபெக்கில் தேர்தல் பரப்புரைகள் ஆரம்பம்

கியூபெக் சட்ட மன்ற தேர்தலுக்கான தேர்தல் பரப்புரைகள் (வியாழக்கிழமை) முதல் உத்தியோகபூர்வமாக ஆரம்பமாகியுள்ளது.

கியூபெக் சட்டமன்ற தேர்தல் எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 1ஆம் திகதி நடைபெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்தநிலையில், தேர்தல் பரப்புரைப் பேரூந்துகள் நேற்று முதல் பரப்புரை நிறைவடையும் வரையில், மாநிலத்தின் அனைத்து பாகங்களுக்கும் தமது பயத்தை ஆரம்பிக்கவுள்ளன.

முன்னதாக 2014ஆம் ஆண்டில் இடம்பெற்ற தேர்தலில் பெரும்பான்மை வாக்குகளுடன் வெற்றி பெற்று முதல்வரான ஃபிலிப் கோலியார்ட்(Philippe Couillard), இம்முறை இரண்டாவது தடவையாகவும் தேர்தலில் போட்டியிடுகின்றார்.

இதேவேளை, நேற்று மாநில ஆளுநரை  கியூபெக் லிபரல் கட்சித் தலைவர் ஃபிலிப் கோலியார்ட்(Philippe Couillard) சந்தித்துள்ளார்.