Aug 25

வரலக்ஷ்மி விரதத்திற்கு கோயிலுக்கு காரில் சென்றவர்களிற்கு ஏற்பட்ட விபரீதம் ?

பாலையடிவட்டை வக்கியல்லை பிரதான வீதியில் நேற்று கார்ஒன்று வேகக்கட்டுப்பாட்டை இழந்து குடைசாய்ந்துள்ளது.


இச்சந்தர்ப்பத்தில் தெய்வாதீனமாக எவருக்கும் பெரிய பாதிப்பு ஏற்படவில்லை உடனடியாக அவ்விடத்தில் நின்ற தமிழ் ஓசை குழுமத்தினர் அவர்களை காரினுள் இருந்து பத்திரமாக மீட்டெடுத்துள்ளனர்.

பின்னர் காரில் வந்தவர்களை விசாரித்த போது தனியார் காப்புறுதி கம்பனியின் முகாமையாளர் ஏறாவூரைச் சேர்ந்த சகோதர இனத்தவரும் வெல்லாவெளி அம்மன் குளத்தைச் சேர்ந்த பெண் இருவருமே காரினுள் இருந்துள்ளனர்.

தாங்கள் காப்புறுதி கம்பனியில் இன்சூரன்ஸ் விடயமாக வந்ததாகவும் அதன்போது இன்று வரலக்ஷ்மி விரதம் அதற்காக கோயிலுக்கு போக வேண்டும் அதனால் தான் காரை வேகமாக செலுத்த கூறியதாக காரில் வந்த இரண்டு பெண்களும் கூறிவிட்டு வீதியால் வந்த ஆட்டோவில் ஏறிசென்றுவிட்டனர் என சம்பவத்தினை நேரில் பார்த்தவர்கள் கூறினார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.