Aug 25

பூப்பந்து ஆரம்ப சுற்றில் தினுக்க இலகு வெற்றி

ஆசிய விளையாட்டு விழாவின் ஆண்களுக்கான ஒற்றையர் பிரிவு பூப்பந்து போட்டிகளில் இலங்கையின் தினுக்க கருணாரத்ன ஆரம்ப சுற்றில் வெற்றிபெற்றதோடு நிலுக்க கருணாரத்ன முதல் சுற்றி தோல்வியை சந்தித்தார்.

இந்தோனேசிய தலைநகர் ஜகார்த்தாவில் நேற்று நடந்த போட்டியில் நிலுக்க கருணாரத்ன தாய்லாந்து வீரர் கோசிட் பெட்பிரடப்பை எதிர்கொண்டார்.

எனினும் அவர் ஆரம்பம் தொட்டு எதிராளிக்கு போட்டி கொடுக்காத நிலையில் முதல் செட்டை 21–12 பறிகோடுத்ததோடு இரண்டாவது செட்டிலும் இதே புள்ளி அடிப்படையில் தோல்வியை சந்தித்தார்.

இந்நிலையில் இலங்கை மற்றொரு அனுபவ பூப்பந்து நட்சத்திரமான தினுக்க கருணாரத்ன நேற்று தனது ஆரம்ப சுற்று போட்டியில் மக்காவு நாட்டைச் சேர்ந்த பங் பொங் புயிவை எதிர்கொண்டார்.

இந்த போட்டியின் முதல் செட்டை அவர் 21–14 என இலகுவாக கைப்பற்றினார். இதற்கு அவர் 17 நிமிடங்கள் எடுத்துக் கொண்டார். அதேபோன்று இரண்டாவது செட்டிலும் சிறப்பாக ஆடிய அவர் 18 நிமிடங்களில் அவர் அந்த செட்டையும் தன்வசமாக்கினார். அந்த செட்டை அவர் 21--–15 என கைப்பற்றி 2-–0 என வெற்றி பெற்றார்.