Aug 25

அஜித் பட பர்ஸ்ட் லுக் போஸ்டரை பாராட்டிய திமுக எம்எல்ஏ!

அஜித் நடிப்பில் உருவாகி வரும் ‘விஸ்வாசம்’ படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை திமுக எம்.எல்.ஏ. அன்பழகன் பாராட்டியுள்ளார். 

‘விவேகம்’ படத்தை அடுத்து அஜித் தற்போது நடித்து வரும் படம் ‘விஸ்வாசம்’. இந்தப் படத்தை சிவா இயக்கி வருகிறார். இவர் அஜித்தை வைத்து இயக்கும் நான்காவது படம் ‘விஸ்வாசம்’. இந்தப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் நேற்று காலை 3.30 மணிக்கு வெளியானது. 

வெளியான போஸ்டரில் அஜித் இரட்டை வேடத்தில் இருப்பது ரசிகர்களை வெகுவாக கவர்ந்ததுள்ளது. இதனை பலரும் சமூகவலைதளத்தில் பாராட்டியுள்ளனர். இந்நிலையில் தி.மு.க வின் எம்.எல்.ஏ அன்பகழன் நடிகர் அஜித்துக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். 

அவர் வெளியிட்டுள்ள பதிவில் ‘‘அஜித் ரசிகர்களுக்கு இரட்டை விருந்து. ‘விஸ்வாசம்’ பர்ஸ்ட் லுக் மிகவும் அழகாகவும் உற்சாகமாகவும் இருந்தது. அஜித்திற்கும் படக்குழுவிற்கும் வாழ்த்துக்கள்’’ என்று கூறியுள்ளார்.