Mar 15

முன்னாள் பெண் போராளி உட்பட நால்வர் கைது

புனர்வாழ்வளிக்கப்பட்ட முன்னாள் புலிகள் இயக்கத்தின் பெண் புலி உறுப்பினர்  இராணுவ வீரர் ஒருவர் உள்ளிட்ட நால்வர் வெல்லவாய பொலிஸாரினால் கைது செய்யப்பட்டு 14 நாட்கள் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

கொட்டவெஹரகல பகுதியில்  ஜனாதிபதி பங்கேற்கும் நிகழ்வொன்று இடம்பெற்ற நிலையில் அதன் பாதுகப்பு பணியில் ஈடுபட்டிருந்த வெல்லவாய பொலிஸாரே 119 தகவல் ஒன்றுக்கு அமைவாக இந்த நால்வரையும் கைதுச் செய்துள்ளனர்.

கைது செய்யப்பட்ட விடுதலைப் புலிகளின் முன்னாள் பெண் உறுப்பினர் உள்ளிட்ட நால்வரையும் எதிர்வரும் 28ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு வெல்லவாய நீதிவான் நீதிமன்றினால் உத்தரவிடப்பட்டுள்ளது.

கைதானவர்களில் ஒருவர் கிழக்கில் முகாம் ஒன்றில் கடமையாற்றும் வெல்லவாய கொட்டவெஹரகல பகுதியைச் சேர்ந்த இராணுவ வீரர் என்பது தெரியவந்துள்ளது.

குறித்த இராணுவ வீரர் திருமணமானவர் என்ற போதும் அவருக்கு பிள்ளைகள் இல்லை எனவும் அந்த குறையைத் தீர்க்க முன்னாள் புலி உருப்பினர் ஊடாக குழந்தை ஒன்றினை பெற்றுக்கொள்ள திட்டமிட்டு அவரது விருப்பத்துக்கு அமைவாகவே அவரை வெல்லவாயவுக்கு அழைத்ததாகவும் அது தொடர்பில் சட்ட ஆலோசனை பெறப் போகும் வழியிலேயே கைதுச் செய்யப்பட்டதாகவும் சந்தேக நபர்கள் தெரிவித்துள்ளனர்.