Aug 24

அமெரிக்க யுத்த கப்பலான UFF என்ஜேரேட் திருகோணமலையில்..!!

திருகோணமலை அஸ்ரப் துறைமுகத்திற்கு அமெரிக்க யுத்த கப்பலான UFF என்ஜேரேட் இன்று (24) காலை வந்தடைந்தாக எமது செய்தியாளர் தெரிவிக்கின்றார்.


208 அடி நீளமான இக்கப்பலானது 2 ஹெலிகொப்டர் இறங்கு தளங்களை கொண்டிருப்பதுடன் 6 ஹெலிகொப்டர்களை தம் வசம் வைத்துள்ளது.

மேலும் 33 அதிகாரிகள் உட்பட 900 கடற்படை வீரர்கள் குறித்த கப்பலில் பணிபுரிகின்றார்கள். இன்று வந்தடைந்த அக்கப்பலானது இம்மாதம் 28 ஆம் திகதி வரை அஸ்ரப் துறைமுகத்தில் தரித்து நிற்கும் எனவும் தெரிவிக்கப்படுகிறது.