Aug 24

கோத்தபாயவிற்கு எதிராக விசேட நீதிமன்றில் வழக்கு தாக்கல்

டீ ஏ ராஜபக்ச அருங்காட்சியகத்தை அமைத்தவேளை அரச நிதியை மோசடி செய்ததாக முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்ச உட்பட ஆறு பேரிற்கு எதிராக விசேட நீதிமன்றில் இன்று விசேட நீதிமன்றில் வழக்கு தாக்கல் செய்துள்ளது.

நிதிக்குற்றங்கள் தொடர்பான விசேட பொலிஸ் பிரிவினர் மேற்கொண்ட விசாரணைகளை அடிப்படையாக வைத்தே சட்டமா அதிபர் திணைக்களம்; குற்றப்பத்திரத்தை தாக்கல்  செய்துள்ளது.

மெதமுலானவில் ராஜபக்ச அருங்காட்சியகத்தையும் நினைவிடத்தையும் அமைத்த வேளை முன்னாள் பாதுகாப்பு செயலாளர் உட்பட ஏழு பேரும் 49மி;ல்லியன் ருபாய்களை மோசடி செய்தனர் என சட்டமா அதிபர் திணைக்களம்; குற்றச்சாட்டை சுமத்தியுள்ளது.


பாரிய மோசடிகள் குறித்து விசாரணைகளை மேற்கொள்வதற்காக ஏற்படுத்தப்பட்ட விசேட நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட இரண்டாவது வழக்கு இதுவென்பது குறிப்பிடத்தக்கது.