Aug 24

இந்தியர்களை வியப்பில் ஆழ்த்திய ஈழத் தமிழ் அகதிகளின் தியாகம்!

இந்தியாவிலுள்ள ஈழத் தமிழ் அகதிகள் கேரளத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு மூன்று லட்சம் ரூபா பெறுமதியான நிவாரணப் பொருட்களை அனுப்பி வைத்துள்ளதாக தகவல் கிடைத்துள்ளது.


இதன்படி, குறித்த நிவாரணப் பொருட்கள் நேற்று வியாழக்கிழமை பரமத்தி அகதிகள் முகாமிலிருந்து அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.

குறித்த நிவாரணப் பொருட்களை மேட்டுப்பட்டி இலங்கை அகதிகள் முகாம், பரமத்தி இலங்கை அகதிகள் முகாம், பரமத்தி வேலூர் ஜூனியர் சேம்பர் இன்டர்நேஷனல் மற்றும் பரமத்தி வேலூர் தாலுகா லொறி உரிமையாளர்கள் சங்கம் ஆகியன ஒன்றிணைந்து வழங்கியுள்ளன.

சுமார் மூன்று லட்சம் ரூபா பெறுமதியான அரிசி, பருப்பு, துணிகள், கொசு ஒழிப்பு மருந்துகள் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களே இவ்வாறு அனுப்பப்பட்டுள்ளன.