Aug 24

வன்னிப் பெருநிலப்பரப்பைக் கட்டிக்காத்த மாவீரனை நினைவு கூரும் நாள்!

ஒல்லாந்தருடன் துணிச்சலுடன் எதிர்த்துப் போரிட்ட மாவீரன் பண்டாரவன்னியனின் 215வது ஞாபகார்த்த விழா வவுனியாநகரசபையின் நகரபிதா.இ.கௌதமன் தலைமையில் 25.08.2018 சனிக்கிழமை நாளை காலை 8மணி முதல் வவுனியாவில் கொண்டாடப்படவுள்ளது.


இரு பிரிவுகளாக நடைபெறவுள்ள நிகழ்வில் காலை நிகழ்வாக 8 மணியளவில் வவுனியா அரச அதிபர் பணிமனைக்கு அருகில் உள்ள பண்டாரவன்னியன் சிலைக்கு மாலை அணிவித்தல் நடைபெற்று 9.30 மணிக்கு நகரசபை மண்டபத்தில் ஏனைய நிகழ்வுகள் நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது. சிலைக்கு மாலை சூட்டுதல் நிறைவடைந்ததும்,தமிழ்மணி. அகளங்கன் சிலையருகில் சொற்பொழிவாற்றுவார்.

தொடர்ந்து வவுனியா கலாசாரமண்டபத்தில் கொடியேற்றல்,கொடிக்கீதம் இசைத்தலுடன் மங்கலவிளக்கேற்றப்பட்டு நிகழ்ச்சிகள் ஆரம்பமாகும். ஆசிரியர் சுஜிதாசிற்றம்பலத்தின் மாணவர்கள் வழங்கும் வரவேற்பு நடனம் இடம்பெறும். தொடர்ந்து விருந்தினர்களை வரவேற்று நகரபிதா.இ.கௌதமன் தலைமையுரையாற்றுவார்.

இவ்விழாவின் பிரதமவிருந்தினராக ஜனாதிபதிச் சட்டத்தரணி.மு.சிற்றம்பலம் கலந்துகொண்டு பிரதமவிருந்தினருரையாற்றவுள்ளமை குறிப்பிடதக்கது. அத்துடன் அருணாசெலத்துரை பண்டாரவன்னியனை பற்றிய நினைவுப் பேருரையைவழங்குவதுடன் தமிழருவி.த.சிவகுமாரன் சிறப்புரையாற்றவுள்ளார்.

வவுனியாகலைத் தொடர்புமையத்தினர்' வழங்கும் கவிஞர்களின் கவியளிக்கை'என்னும் நிகழ்வு இடம்பெறுவதுடன் இந்நிகழ்வில் எஸ்.எஸ்.வாசன்,.முல்லைத்தீபன்,.ஐ.யோகநாதன்,.மாணிக்கம் ஜெகன் ஆகியோர்கலந்துசிறப்பிக்கவுள்ளனர்.

வவுனியாகோயில்குளம் அகிலாண்டேஸ்வரிநுண்கலைக் கல்லூரி மாணவர்கள் வழங்கும் 'பன்றிப் பள்ளு'பாநாடகமும் இடம்பெற்று நகரசபைசெயலாளர். இ.தயாபரன் நன்றியுரைவழங்குவதுடன் நிகழ்வுகள் இனிதே நிறைவுபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

நிகழ்வில்அமைச்சர்கள்,பிரதிஅமைச்சர்,பாராளுமன்றஉறுப்பினர்கள்,மாகாணசபைஉறுப்பினர்கள்,உள்ளுராட்சிமன்றஉறுப்பினர்கள்,அரசாங்கஅதிபர்,பிரதேசசெயலர்,மாவட்டதிணைக்களதலைவர்கள்,மாவட்டபொதுஅமைப்புகளின் பிரதிநிதிகள் ஆகியோர்விருந்தினர்களாககலந்துகொள்ளவுள்ளதுடன் குறித்தநிகழ்வில் அனைவரையும் கலந்துசிறப்பிக்குமாறுநகரபிதாஅழைப்புவிடுத்துள்ளார்.