Aug 24

மாணவியுடன் வாழ்வதற்காக பேராசிரியர் தீட்டிய கொடூரத் திட்டம்

மனிதனை மனிதன் கொலை செய்வதற்கு இப்படியும் யோசிக்கின்றார்கள் என்றால் உலகின் புதிய படைப்புக்கள் அனைத்தும் மனிதனை வாழ வைப்பதற்கா அல்லது கொலை செய்வதற்கா என்ற சந்தேகம் எழுந்துள்ளது.

மூன்று பேர் கொண்ட அழகிய குடும்பம். தாய் தந்தை மகள் என அனைவரும் மகிழ்ச்சியை வாழ்ந்து வந்துள்ளனர்.திடீரென ஒருநாள் தாயும், மகளும் சிற்றூர்தியொன்றில் சடலமாக கிடந்தனர்.தனது அழகிய குடும்பத்தை இழந்து கதறினார் தந்தை.சடலங்களை மீட்ட காவல்துறை இவர்கள் எப்படி இறந்தார்கள் என பெரும் குழப்பத்தில் ஆழ்ந்தனர்.சடலங்களில் காயங்கள் உள்ளிட்ட எந்த தடயமும் இருக்கவில்லை.2015 ஆம் ஆண்டு இடம்பெற்ற இந்த மரணத்தின் வழக்கு எந்தவித முன்னெற்றமும் இன்றி காணப்பட்டது.பின்னர் காவல்துறைக்கு கிடைத்தது ஆதாரம்.அவர்கள் சடலங்களாக மீட்கப்பட்ட சிற்றூர்தியில் இருந்து காற்று இழந்த இரண்டு யோக பந்துகள் மீட்கப்பட்டன.இதனை பரிசோதித்த போதே பேரதிர்ச்சி காத்திருந்தது.அவற்றில் கார்பன் மோனொக்சைட் காற்று நிரப்பப்பட்டிருந்தது பரிசோதனையில் உரிதியானது.


அதில் மனிதன் உயிர் வாழ்வதற்கு அவசியமான (co) எனப்படும் ஒக்சிஜனின் அளவு மிகவும் குறைந்த பெருமதியிலேயே காணப்படுகின்றது. ஆகனாலயே O2 என அழைப்பதை தவிர்த்து காபன் மொனொக்சைட்டை co என அழைக்கின்றனர்.அந்த காபன் மொனொக்சைட்டை(co) சுவாசித்த காரணத்தினால் தாயும் மகளும் பரிதாபமாக உயிரிழந்துள்ளமை அம்பலமானது.பின்னர் சம்பவம் குறித்த விசாரணையை தீவிரப்படுத்திய காவல்துறைக்கு காத்திருந்தது அதிர்ச்சி.மரணமான பெண்ணின் கணவர் ஒரு மயக்கவியல் நிபுணர் ஆகும்.


யோகா பந்தில் விஷக்காற்று நிரப்பப்பட்டிருந்ததை அடிப்படையாக கொண்டு குறித்த நபர் மீது சந்தேகம் எழுந்தது. பின்னர் காவல்துறை மேற்கொண்ட விசாரணையில் கணவர் தனது மனைவியை கொலை செய்ய தீட்டப்பட்ட திட்டமே இந்த யோக பந்து திட்டம் ஆகும்.குறித்த நபர் பல்கலைக்கழகம் ஒன்றில் பேராசிரியராக பணிபுரிந்து வந்துள்ள நிலையில், அவருக்கும் அங்கு கல்வி பயிலும் மாணவிக்கும் இடையே தொடர்பு ஏற்பட்டுள்ளது.மாணவியுடன் வாழ்வதற்காக தனது மனைவியை போட்டுத்தள்ள திட்டமிட்டுள்ளார்.பல்கலைக்கழக ஆய்வகத்தில் இருந்த இரண்டு யோக பந்துகளில் காபன் மோனொக்சைட் வாயுவி நிரப்பியுள்ளார்.இது தொடர்பாக சக பணியாளர்கள் கேட்டபோது வீட்டில் உள்ள முயல்களை கட்டுப்படுத்துவதற்காக எடுத்துச் செல்வதாக கூறியுள்ளார்.அந்த யோக பந்துகளை மனைவி பயணிக்கும் வாகனத்தில் வைத்துள்ளார்.


மனைவி செல்லும் காரில்மகளை செல்ல வேண்டாம் எனவும் கூறியுள்ளார்.ஆனால் இந்த திட்டத்தால் அவரது மகளும் இறப்பார் என அவர் கொஞ்சம் கூடு எதிர்பார்க்கவில்லை.சக பயணியாளர்களிடம் முயலை கட்டுப்படுத்துவதற்காக யோக பந்துகளை காற்று நிரப்பி எடுத்துச் செல்வதாக கூறிய அவர், காவல்துறையிடம் எலிகளை கட்டுப்படுத்துவதற்காக என கூறியே சிக்கியுள்ளார்.இந்த சம்பவம் சீனாவின் - ஹாங்காங் நகரில் இடம்பெற்றுள்ளது.மாணவிக்காக மனைவியை கொன்ற கணவர் இன்று சிறையில் கைதிகளுடன் வாழ்க்கிறார்.