Aug 24

14 வயது மகளை பாலியல் தொழிலுக்காக விற்று பணம் பெற்ற தாய் !

தனது 14 வயது மகளை பாலியல் தொழிலுக்காக விற்று பணம் பெற்ற தாய் ஒருவர் தொடர்பிலான பெரும் அதிர்ச்சிகர செய்தி ஒன்று பதிவாகியுள்ளது.காஷ்மீர் லதா எனும் குறித்த தாயார், தனது மகளின் கருவினை கலைத்து பல மாதங்களாக பாலியல் தொழிலுக்கு மகளை அனுப்பியுள்ளார்.


சம்பவம் நியுசிலாந்தில் கடந்த 2014 ஆம் ஆண்டு இடம்பெற்றுள்ள நிலையில் அண்மையில் வழக்கிற்கான தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளமை சுட்டிக்காட்டத்தக்கது.குறித்த கால பகுதியில் மகளுக்கு 14 வயதாக இருந்த நிலையில், தற்போது 18 வயது என குறிப்பிடப்பட்டுள்ளது.மகளை கட்டாயப்படுத்தி இவ்வாறு பாலியல் தொழிலில் ஈடுபட வைத்துள்ள நிலையில், 2015 ஆம் ஆண்டு மகளான சிறுமி கர்ப்பமாகியுள்ளார்.குறித்த சம்பவம் காவற்துறைக்கு தெரியவந்துள்ள நிலையில், பாலியல் தொழிலுக்கு மகளை அனுப்பியதன் காரணமாக தாயார் கைது செய்யப்பட்டுள்ளார்.


கைது செய்யப்பட்ட தாயார், நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டு வழக்கு தொடரப்பட்ட நிலையில், நீதிமன்றம் தண்டனை வழங்கியுள்ளது.இதற்கமைய, தாயாருக்கு 6 வருடங்களும் 11 மாதங்களும் சிறைத் தண்டனை வழங்கி நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.இதன்போது, தாயார் இவ்வாறு நீதிமன்றில் வாக்குமூலம் அளித்துள்ளார்..'" தாங்கள் வாழ்வதற்கு எவ்விதமான வழிகளும் இல்லாமையின் காரணமாகவே இவ்வாறான செயற்பாட்டை மேற்கொண்டதாக தெரிவித்துள்ளார்.மேலும், தனது மகளை இளைஞர்களுக்கு ஒரு லட்சம் ரூபாய் அமெரிக்க டொலருக்கு விற்பனை செய்து வந்ததாகவும் நீதிமன்றில் ஒப்புக் கொண்டுள்ளார்.