Aug 24

உலகில் அதிக சம்பளம் பெறும் வீராங்கனையாக செரீனா சாதனை

டென்னிஸ் நட்சத்திரம் செரீனா வில்லியம்ஸ், அதிக சம்பளம் வாங்கும் பெண் விளையாட்டு வீராங்கனைகள் பட்டியலில் தொடர்ந்து மூன்றாவது ஆண்டாக முதல் இடம் பிடித்துள்ளார்.

இந்தப் பட்டியலை போபஸ் நிறுவனம் வெளியிட்டது.

குழந்தை பெற்ற பின்னர் கடந்த மார்ச் மாதம் செரீகா போட்டிகளில் பங்கேற்கத் ஆரம்பித்துள்ளார். சென்ற ஆண்டு வில்லியம்ஸ், போட்டிகளில் அடைந்த வெற்றியின் மூலம் 62,000 அமெரிக்க டொலர் சம்பாதித்துள்ளார். ஆனால் விளம்பரங்கள் மூலம் அவர் கிட்டத்தட்ட 18 மில்லியன் டொலர் சம்பாதித்ததாக போபஸ் குறிப்பிட்டது.

டென்னிஸ் வீராங்கனை டேன் கெரொலின் இரண்டாம் இடத்தைப் பெற்றார். அவர் 13 மில்லியன் டொலர் சம்பாதித்ததாக கூறப்பட்டது. இந்தியப் பூப்பந்து வீராங்கனை பீ.வி சிந்து ஏழாம் இடத்தைப் பெற்றார். அவர் 8.5 மில்லியன் டொலர் சம்பாதித்ததாக போபஸ் குறிப்பிட்டது.

கடந்த ஜூன் மாதம் போபஸ் வெளியிட்ட அதிக சம்பளம் பெறும் விளையாட்டு வீரர்கள் பட்டியலில் முதல் 100 இடங்களில் பெண் வீராங்கனைகள் எவரும் இடம் பெறவில்லை.