Jun 07

இன்று சென்னை திரும்புகிறார் ரஜினி

காலா படத்தின் முதல் கட்ட படப்பிடிப்புகள் நிறைவடைத்துள்ளதால் ரஜினி இன்று சென்னை திருப்ப வாய்ப்புள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

பா.ரஞ்சித் இயக்கத்தில் தற்போது "காலா" படத்தில் ரஜினிகாந்த நடித்து வருகிறார்.கடந்த மாதம் இறுதியில் தொடங்கிய முதல் கட்ட படப்பிடிப்புகள் நேற்றுடன் நிறைவுப்பெற்றுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளன. மும்பையில் பருவ மழை பெய்ய துவங்கியதால், பத்து நாட்கள் நடந்த இந்த ஷூட்டிங்கில் கலந்து கொண்ட ரஜினி இன்று சென்னை வருவதாக கூறப்படுகிறது

மேலும் இம்மாதம் கடைசியிலோ அல்லது ஜுலை மாத துவகத்திலோ ரஜினி மீண்டும் ரசிகர்களை சந்திக்க திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ஏற்கனவே இந்நிகழ்ச்சியில் பங்கேற்ற ரசிகர்களை தவிர மற்ற மாவட்ட ரசிகர்கள் இதில் கலந்து கொள்வார்கள். ரசிகர்களுடனான இந்த சந்திப்பின் போது ரஜினி அரசியல் குறித்து விவாதிக்க வாய்ப்புள்ளாதாக கூறப்படுகிறது.