Aug 24

ஆசிய விளையாட்டுப் போட்டி - துடுப்பு படகு போட்டியில் இந்தியாவுக்கு 2 வெண்கலம்

இந்தோனேசியாவில் நடைபெற்று வரும் ஆசிய விளையாட்டுப்போட்டியில் இன்று துடுப்பு படகு போட்டிகள் நடைபெற்றன. இதில் இந்திய வீரர்கள் சாதனை படைத்துள்ளனர்.

ஆண்களுக்கான இலகுரக துடுப்பு படகு ஒற்றையர் பிரிவில் துஷ்யந்த் வெண்கலம் வென்றார். இவர் நிர்ணயிக்கப்பட்ட இலக்கை 7 நிமிடம் 18.76 வினாடிகளில் எட்டினார். இதேபோல் இலகுரக துடுப்பு படகு இரட்டையர் பிரிவில் ரோகித் குமார், பகவான் தாஸ் ஆகியோர் இணைந்து வெண்கலம் வென்றுள்ளனர். 

இதன்மூலம் இந்தியா 4 தங்கம், 4 வெள்ளி, 12 வெண்கலம் என மொத்தம் 20 பதக்கங்களுடன் பதக்க பட்டியலில் 10 இடத்தில் உள்ளது.