Aug 24

முல்லைத்தீவில் இரு தலைகளுடன் பிறந்த பசுக்கன்று

முல்லைத்தீவு- ஒட்டுசுட்டான், புளியங்குளம் பகுதியில் இரண்டு தலைகளுடன் பசுக்கன்று ஒன்றினை மாடு ஒன்று ஈன்றுள்ள சம்பவம் பிரதேச மக்களை வியப்பில் ஆழ்த்தியுள்ளது.

ஒட்டுசுட்டான் பகுதியிலுள்ள விவசாயி ஒருவரின் வீட்டிலுள்ள மாடு ஒன்றே இக்கன்றினை ஈன்றுள்ளது .

குறித்த கன்றும் தாய்பசுவும் தற்போது நலமாக இருப்பதாக மாட்டின் உரிமையாளர் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் இந்த அதிசய பசுக்கன்றை நூறுக்கணக்கான மக்கள் சென்று பார்வையிட்டு வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது.